ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார். அடேங்கப்பா! இந்த உயிர்கள் எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டுமே என்று வருத்தப்படுவார். அப்போது, அவர் உள்ளத்தில் கருணை பொங்கும், மீண்டும் உயிர்களைப் படைக்க முடிவெடுப்பார். மகிழ்ச்சியில் அப்போது நடனம் புரிவார். அதையே ஆனந்த தாண்டவம் என்பர். சிவன் நடனமாடும் போது நட(ன)ராஜர் என்ற பட்டப்பெயர் பெறுவார்.