திருவாரூர்: நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவிலில் நேற்றுமுன் தினம் நடந்த தேரோட்டத்தில் உணவுத்துறை அமை ச்சர் பங்கேற்று வடம் பிடித்து துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அருள் மிகு வாஞ் சிநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள குப்தகங்கையில் நீராடி எமர்தர்மன் கோவிலுக்கு சென்று மூலவரான வாஞ்சிதார் உள்ளிட்ட பிற தெய்வங்களை வணங்கி வெளிவந்தால் ஓம் எழுத்து வடிவில் அமையும். மேலும் பிதுர் தோஷத்திற்கு சிறப்பான பரிகாரஸ்தலமாக இருப்பதால் பல்வேறுப்ப குதி யில் இருந்து வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த மாதம் 17ம்தேதி துவங் கியது. தினசரி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச் சியான தேரோட்டம் நேற்று முன் தினம் மாலை நடந்தது. இதில் சுப்ரம ணியர் வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் அமர்ந்து வீதியுலாக் காட்சி யில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அமைச்சர் காமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேரோட்டத்தை துவ க்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆன்மிக அறப்பணி செய்து வரும் சென்னை மகாலட்சுமி சுப்ரமணியம், நன்னிலம் சேர்மன் சம்பத், சிவத்தொண்டர்கள் நடராஜன் ஐயர், திருமதிக் குண்ணம் குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதிகாலையில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குப்தக்கங்கையில் பக்தர்கள் நீராடி வாஞ்சிநாதரை வணங்கினர்.