Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவனே இந்த உலகின் முதல் என்.ஜி.ஓ., : ... கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2013
11:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி நாளை 17ம் ததி தேரோட்டம் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி சுவாமி - அம்பாளுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும், காலை பஞ்சமூர்த்திகளும், இரவு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமி சிறப்பு வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. நாளை 17ம் தேதி தேரோட்டத்தையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் நடராஜர் சித்சபையில் இருந்து புறப்பாடு செய்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர் நான்கு வீதிகள் வலம் வந்து நிலைக்கு வரும். தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளி இரவு 8 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. 18ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் அதிகாலை 4 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் திருவாபரண அலங்கார ஊஞ்சல் காட்சி, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, மதியம் 2 மணிக்கு ஆனந்த நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி முருகன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar