பதிவு செய்த நாள்
16
டிச
2013
11:12
ஆர்.கே.பேட்டை:ராதா ருக்மணி உடனுறை கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, குமரமிட்ட எனும் சிங்க சமுத்திரம் கிராமத்தில், ராதா ருக்மணி உடனுறை கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம், நடந்தது.காலை, 8:30 மணிக்கு, புனித நீர் அபிஷேகத்துடன், கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக, யாக சாலையில் இருந்து புனித நீர்கலசங்கள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 7:00 மணிக்கு, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.