புதுச்சேரி: சைவ நெறிக்கழகம் சார்பில் திருத்தொண்டர் திருவிழா நாளை நடக்கிறது. புதுச்சேரி சைவ நெறிக் கழகம் சார்பில் 3ம் ஆண்டு திருத்தொண்டர் திருவிழா நாளை (17ம் தேதி) கோரிமேடு திருநகர் அங்கயற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவிலில் நடக்கிறது. விழாவில், நடேச சுப்ரமணியன், சாவித்திரி ஆகியோர் இடபக் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைக்கின்றனர்.சைவ நெறிக் கழக தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்குகிறார். இணை செயலர் அல்லிமுத்து வரவேற்கிறார்.மதியம் 3:30 மணிக்கு, விழுப்புரம் திருமுறை இசைப்பயிற்சி மைய இசை ஆசிரியர் சம்பந்தத்தின் திருமுறை இசை நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு குளித்தலை ராமலிங்கம் "எத்தனுவில் நின்றும் இறை பணியார்க்கு இல்லை வினை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். இரவு 7:30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி, தொண்டர்களுக்கு ஆசி வழங்குகிறார். அதைத் தொடர்ந்து, திருத்தொண்டர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.