பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
அவிநாசி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், யானைகள் புத்துணர்வு முகாம், இன்று துவங்கி, வரும் பிப்., 4 வரை நடக்கிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகள் முகாம்களில் பங்கேற்க, லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் அழைத்து செல்லப்படுகின்றன. அவ்வாறு செல்லும் யானைகளுக்கும், உடன் செல்பவர்களுக்கும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், யானைகளுக்கு தென்னை ஓலை உணவாக அளிக்கப்பட்டது. யானையுடன் செல்லும் அறநிலையத்துறை அதிகாரிகள், பாகன்கள், சில நிமிடங்கள் ஓய்வெடுக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், "" இம்முகாம், விடியவிடிய செயல்படும், என்றார்.