பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
காஞ்சிபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கத்தீஸ்வரர், முத்தீஸ்வரர் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து சிவாலயங்களில், அதிகாலை முதலே சிவ லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், உற்சவ மூர்த்திகள் தம்பதி சமேத ராய் சிறப்பு அலங்கார பல்லக்கில், முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தனர்.கச்சபேஸ்வரர் கோவிலில், திருமணம் ஆகாத பெண்கள், தலையில் மண் சட்டியினால் ஆனா தீபம் ஏந்தி, சுவாமியை வலம் வந்து, சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனால், ÷காவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.சித்ரகுப்தர் சுவாமி கோவிலில் உற்சவர் கரணி அம்பாள் மற்றும் சித்ரகுப்தர் சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராய், அருள்பாலித்தனர். ÷மலும், முக்கிய வீதிகளில்வீதியுலா டைபெற்றது.இதேபோல், நாகலத்து மேடு பகுதியில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர் பெருமான் கோவிலில், உற்சவர் மீனாட்சி சுந்த ரேஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பல இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டன.திருப்போரூர்: இதேபோல் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவிலில், அதிகாலை 2:00 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 8:00 மணி அளவில் சுவாமி வீதி உலா வந்தனர்.மேலையூர் நாகபரணீஸ்வரர் கோவில், மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் கோவில், அகரம் கைலாசநாதர் கோவில் உள்ளிட்டகோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இக்கோவில் விழாக்களில் ஏராளமானபக்தர்கள் பங்கேற்றனர்.