திருவள்ளூவர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமியையும், மரகதாம்பிகையையும், பூசலார் நாயனாரையும் வழிபட்டால் இருதயநோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சென்னை பூந்தமல்லியிலிருந்து 54ஏ பஸ்சில் சென்று ராமர்கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் இந்த கோயிலை அடையலாம். சென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சென்று திருநின்றவூரில் இறங்கி, ஒரு கி.மீ., நடந்தால்இக்கோயில்வந்துவிடும். இருதய நோய் டாக்டர்களும் இங்கு வந்து செல்கின்றனர்.