சபரிமலை சேவா சமாஜம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2013 11:12
சின்னமனூர்: சின்னமனூர் சபரிமலை சேவா சமாஜம் சார்பில், ஐயப்ப பக்தர்களுக்கான 18 நாள் சிறப்பு அன்னதான முகாம் துவங்கியது. சின்னமனூர் மெயின் ரோட்டில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் கட்டடத்தில், இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வாகனங்களிலும், பாதையாத்திரையாகவும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் தினமும் 1000 பேர் வரை காலை 11 முதல் பகல் 2 மணி வரை இங்கு உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா சபரிமலை சேவா சமாஜத்தின் மாநில அமைப்பாளர் ஹரிஜி தலைமையில் நடந்தது. தலைவர் ராஜகோபால், செயலாளர் ராகவன், பொருளாளர் வீரபத்திரன் துவக்கி வைத்தனர். ஜனவரி 2 ம் தேதி வரை அன்னதானம் நடைபெறும்.