5 மணி போராட்டத்துக்குப் பின்னர் மணக்குள விநாயகர் கோவில் யானை நலவாழ்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலை யொட்டியுள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து ஏராளமான யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்த முகாமில் புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்புவாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமியும் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்தார். மணக்குள விநாயகர் கோவில் யானை இதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி லாரி மூலம் முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் யானை லட்சுமியை லாரியில் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில் யானை அதிகாலை 3 மணியளவில் அங்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒரு சறுக்கு மரம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அந்த யானையை லாரியில் ஏற்ற முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடியும் யானை பாகனால் அந்த யானையை லாரியில் ஏற்ற முடியவில்லை. பின்னர் அந்த முயற்சியை கைவிட்டனர். 5 மணி நேர போராட்டம் இதனை தொடர்ந்து குரும்பாப்பேட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வைத்து யானையை லாரியில் ஏற்ற முடிவு செய்தனர். இதற்காக யானை லட்சுமியை உப்பளத்தில் இருந்து குரும்பாப்பேட்டிற்கு நடத்தியே அழைத்து சென்றனர். லாரியும் அங்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானைக்கு உணவு வழங்கப்பட்டு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு மேடான இடத்தின் அருகே லாரியை நிறுத்தி அதன் வழியாக யானையை லாரியில் ஏற்றினர்.