வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியும் சீரமைக்கப்படாத மதில்சுவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியும், பழமைவாய்ந்த மதில் சுவரை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டினர். 800-ஆம் ஆண்டுகளில்தான் கோயிலின் சுற்றுச்சுவர் 6 அடி அகலத்தில், தெற்கு வடக்காக 1 கி.மீ. தூரத்துக்கும், கிழக்கு, மேற்காக 500 மீட்டர் தூரத்துக்கும் 30 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுவரின் 6 அடி அகலத்தில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தலா 1 அடி அகலத்துக்கு கற்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடுவில் 4 அடி அகலத்தில் கற்கள், சுட்ட செங்கற்கள், மண், சுண்ணாம்பு கலந்து கலவைகள் மூலம் மதில் சுவர் கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பது தெரிய வருகிறது. இவ்வாறு கலைநயமிக்க வகையில் கட்டப்பட்ட கோயில் கட்டடங்கள், மதில்சுவர்கள் பராமரிப்பின்றி உள்ளன. குறிப்பாக மதில்சுவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தொடர் பராமரிப்பு இல்லாததாலே கடந்த புதன்கிழமை (டிசம்பர் 18) தெற்கு மதில் சுவர் பெயர்ந்து விழுந்தது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்காக கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன.