வால்பாறை: மண்டலபூஜை திருவிழாவையொட்டி, வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலில், ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து வந்தனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமி கோவிலின் 28ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை 11.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ., ஆறுமுகம், நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து, தாசில்தார் பாலகிருஷ்ணன், வாட்டர்பால்எஸ்டேட் இயக்குனர் அஸ்வின்கரும்பையா, பாரிஆக்ரோ டீ எஸ்டேட் துணைத்தலைவர் அருண்குமார் உட்பட பலர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பாலகொம்பு ஊர்வலமாக கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு அலங்கார தேரில் ஐயப்பன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.