பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
அன்பு, அமைதி, சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக உலகில் அவதரித்த இயேசு, தனது வாழ்க்கையில் முழுமையாக அவற்றை கடைபிடித்ததோடு, அனைவரும் அதையே பின்பற்றவேண்டுமென வலியுறுத்தினார். அதற்காக திருச்சபையை தோற்றுவித்தார். தனது சீடர்களை, குருக்களாக திருநிலைப்படுத்தினார். தன்னையே சிலுவையில் அர்ப்பணித்து திருப்பலியை உருவாக்கினார். ""சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலை தருகிறேன், என இருகரம் விரித்து நமக்கு அழைப்பு விடுக்கும் இயேசுவிடம், நமது வாழ்க்கையை ஒப்படைப்போம். ""ஆண்டவரை, எனது உள்ளம் போற்றி பெருமைப்படுத்துகிறது. என், மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது, என, தனது தாழ்ச்சி, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அன்னை மரியாளின் பாடல் வரிகள், நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டேயிருக்கட்டும். - எம்.பி.அருள் செல்வன்.