புதுச்சேரி: மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி மற்றும் பக்தர்கள் சார்பில், சர்வைஸ்வர்ய சவுபாக்ய ஹோமம் முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் நாளை (25ம் தேதி) மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 வரை நடக்கிறது. இது குறித்து புதுச்சேரி மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய ஆண்டில், மக்கள் எல்லா நலமும் பெறவும், உலக அமைதிக்காகவும் இந்த ""சர்வைஸ்வர்ய சவுபாக்ய ஹோமம் நடத்தப்படுகிறது. மேலும், பூஜ்ய ஸ்ரீசுவாமி ராமகிருஷ்ணானந்தபுரி தலைமையில் குரு பாதுகை பூஜை. ஸ்தோத்திரம் மற்றும் பஜனை, சத்சங்கம், ஹோம திரவியத்தை சமர்ப்பித்தல், பூர்ணாஹூதி நடக்கிறது. ஹோமத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஹோம பிரசாதமாக மாதா அமிர்தானந்தமயி அறிவுரைகள் அடங்கிய மாத இதழான "மாத்ருவாணி மாதந்தோறும் ஒரு ஆண்டிற்கு அனுப்பி வைக்கப்படும். விவரங்களுக்கு முத்துராமன்-94434 60378 வேணுகோபால்-93454 50781 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.