அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடப்பதையொட்டி, காவல் தெய்வமான காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. கரகம் ஜோடித்தல், பொங்கல் வைத்தல், இரவு கால பூஜையுடன் மாவிளக்கு எடுக்கப்பட்டது. பின், அம்மனுக்கு கூழ் படைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெரியாறு ஆற்றுப்படுகையில் கரகம் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் மாலதி, செயல்அலுவலர் ராஜேந்திரகுமார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு: மதுரையில் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் தமிழக அரசு வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன., 16ம் தேதியும், அவனியாபுரத்தில் ஜன., 14ம் தேதியும், பாலமேட்டில் ஜன., 15ம்தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.