பதிவு செய்த நாள்
06
ஏப்
2011
03:04
மனம் : முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல், கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது.
குணமாகும் நோய்கள்: அஜீரணம், மலச்சிக்கல், இடுப்பு, வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம், மூலநோய், ஜீரணக்கோளாறுகள் முதலியவற்றிற்கான சிகிச்சையில் பலனளிக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பை குறைக்கிறது.
ஆன்மீக பலன்கள்: மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியினை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியினை உயர்த்தும்.
எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் கழுத்துப் பிடிப்பு, நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரணக்கோளாறுகளுக்கு வழி வகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும்.