பரமக்குடியில் ஐயப்பன்-புஷ்கலா தேவி திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2013 10:12
பரமக்குடி: கேரளா, ஆரியங்காவில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஐயப்பன் திருக்கல்யாணத்தையடுத்து, தமிழகத்தில் பரமக்குடியில் ஐயப்பனுக்கு நேற்று முன்தினம் (டிச., 24) மாலை 6 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், மாலை மாற்றல் உள்ளிட்ட வைபவங்களுடன், காலை 10.30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கும் - புஷ்கலா தேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், இரவு 7 மணிக்கு பட்டுப்பல்லக்கில் ஐயப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள், பக்தகோடிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று(டிச., 26) காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிள் செய்துள்ளனர்.