பதிவு செய்த நாள்
27
டிச
2013
02:12
*உலகம் முழுவதையும்அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். இந்த உலகில் யாரும் உங்களுக்குஅந்நியமானவர் அல்ல.
*நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் இருப்பதற்குச் சமம் தான்.
*யாராவது ஒருவருக்கு மனமகிழ்ச்சியைக் கொடுக்கமுடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
*கடவுளை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடவுளை நேசிப்பவன் எவனோ அவனே புண்ணியவான்.
*சோம்பலால் உடல்மட்டுமில்லாமல் மனமும் கெட்டுவிடுகிறது. சோம்பலைப் புறக்கணித்து விட்டு ஆற்று வெள்ளம் எப்போதும் ஓடிக் கொண்டிருப்பது போலசுறுசுறுப்புடன் இயங்குங்கள்.
*கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க முடியாது.
*தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை.நடந்ததையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால் துன்பம் தான் உண்டாகும்.
*செல்வந்தன் பணத்தின் மூலமும், ஏழைஇறைவனின் நாமத்தை உச்சரிப்பதன்மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.
*மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி எந்த நன்மையும் உண்டாகாது.
*துன்பம் வந்த காலத்தில் மட்டும் கடவுளை மக்கள் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயேகடவுளைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
*மனதில் ஆசைகள் குறையும் அளவிற்கு ஒருவனுக்குஅமைதியும், நிம்மதியும்உண்டாகும்.
*கடவுளைக் காண்பதும், எப்போதும் அவன் நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே நம் வாழ்வின் லட்சியமாகும்.
*நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். அதனால், அற்பமானது என்று எதையும் இழிவாக நினைக்காதீர்கள்.
*கடவுளிடம் கண்ணீர் விட்டு அழுது விடுங்கள். இதனால், மன அழுக்கும், துன்பமும் குறைந்து விடும்.
*சந்தனத்தைத் தொட்ட கை மணப்பது போல, கடவுளைத் தியானித்தால் மனமும் கடவுள் மயமாகி, எங்கும் நறுமணம்பரவும்.
*சுடும் வார்த்தைகளைப்பேசுவதால், ஒருவரது சுபாவமே கொடுமையாக மாறுகிறது.அநாவசியமாகவோ, பிறர் விரும்பாதவற்றையோ பேசுதல் கூடாது.
*மனிதன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஆனால், மகானோ சிரிக்கிறான். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.
*துன்பத்தைக் கண்டுதுவளாதீர்கள். அவை நீடித்துஇருப்பதில்லை. பாலத்தின்அடியில் ஓடும் நீரைப் போல, அவை ஓடி மறைந்து விடும்.
*விலை கொடுத்து வாங்ககடவுள் காய்கறி அல்ல. நேர்மை, சத்தியம், அன்பு இவையேகடவுளுக்கு பிடித்தமானவை. கடவுளை சரண் அடைந்தால், அளவற்ற கருணையை நம் மீது பொழிவார்.
*மன அமைதியை விரும்பினால், பிறர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். மாறாக எப்போதும் உங்கள் குறைகளை எண்ணிப் பாருங்கள்.
*நற்செயல் செய்ய, காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க கூடாது.
-குருமாதா