பதிவு செய்த நாள்
06
ஏப்
2011
05:04
மனம் : இருதோள்கள், கழுத்து
மூச்சின் கவனம் : ஆசனங்களின் தாயாக இந்த ஆசனம் திகழ்கிறது. நூறுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைக்கும். அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி. தைராய்டை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளை நல்லவிதமாகத் தூண்டி பலமடையச் செய்கிறது. மூளை நல்ல இரத்தஓட்டம் பெறுகின்றது. கண் பார்வை கூடும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் : வெரிகோஸ்வைன் என்னும் ரத்தக்குழாய் புடைத்துப் போகுதல். தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது. தூக்கமின்மை சரியாகும். அதிக தூக்கம் குறையும். ஆரம்ப கட்ட ஹெர்னியா கர்ப்பப்பை இறக்கம் சரியாகும். வளர்சிதை மாற்றம் கட்டுப்படும்.
ஆன்மீக பலன்கள் : நினைவாற்றல் வளர்கின்றது. மனஒருமைப்பாட்டுக்கும், சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளெலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்து பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. ஆசனத்தில் இருக்கும் போது தலையினை பக்கவாட்டில் திரும்பி பார்க்ககூடாது.