திருப்பதி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய, திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிகின்றனர். இலவச தரிசனத்திற்கு 22 மணி நேரம் திருப்பதி ஏழுமலை<யான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று ஒரே நாளில் ரூ.2 கோடியே 62 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.