நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் நாமகிரி பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நரசிம்மர் அரங்கநாதர் குடவரை கோயில் அருகே புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.