ஸ்ரீவைகுண்டம்: குருசுகோயில் சந்தியாகப்பர் ஆலயத்தில் பவள விழா சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியது. பவள விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் விளையாட்டுப் போட்டிகள், குடும்ப ஜெபமாலை, நற்கருணை ஆசீர், பவள விழா கலந்துரையாடலும், மாலையில் நன்றித் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலையில் நன்றி வழிபாடு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலையில் பங்கு உதயமான 75 ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.