பதிவு செய்த நாள்
02
ஜன
2014
11:01
மதுரை: அனுமன் ஜெயந்தியையொட்டி, நேற்று மதுரை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.ரயில்வே குட்செட் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் தீபாராதனைகள் நடந்தன. ரயில்வே குட்ஸ் பார்வேடிங் கிளியரிங் ஏஜன்ட் அசோசியேஷன் தலைவர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, கண்ணன், ஜெயச்சந்திரன் இதில் பங்கேற்றனர்.தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகம் யோக விநாயகர் கோயில், மங்கள ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடந்தன. தலைமை பொறியாளர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சுரேஷ்பட்டர் தலைமையில் பூஜை நடந்தது.பாங்க் காலனி, பாமா ருக்மணி சமேத கோகுலகிருஷ்ணன் கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. திருப்பரங்குன்றம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகி, சிறப்பு பூஜைகள் நடந்தது. திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழாவில், நேற்று காலை மகாசுதர்சன ஹோமம், உற்வர் ஆஞ்சநேயருக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கூடல் மலைத்தெரு கட்டிக்குளம் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் 21 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் குபேர லட்சுமி பூஜை நடந்தது. சுவாமிகளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு துளசி, வடைமாலை சாத்துப்படியாகி, பூஜைகள் நடந்தது.