பழநி பாதயாத்திரை பக்தர்களின் அடிப்படை வசதிக்கு ரூ.5 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2014 12:01
ஒட்டன்சத்திரம்: தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட தேவையான வசதிகளை ஏற்படுத்திதர ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பழநி தைப்பூசத்தில் பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். பல வழிகளில் இருந்து செல்லும் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு வழியில் தான் செல்ல வேண்டும். இதனால் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக காணப்படும். இவர்களுக்கு ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் ஒட்டன்சத்திரம் நகராட்சி பல வசதிகளை ஏற்படுத்திதர தர ரூ.5 லட்சம் செலவிட கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதன்படி தற்காலிக கழிவறைகள், நிழற்பந்தல்கள், முதலுதவி முகாமிற்கு தேவையான மருந்து பொருட்கள் வழங்குதல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு தட்டிகள் ஆகிய பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.