பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
மறைமலை நகர்: மறைமலை நகரில் உள்ள, சிவா - விஷ்ணு கோவிலில், மகா கும்பாபிஷேகம் கடந்த, 12ம் தேதி நடந்தது. மறைமலை நகர், இணைவு -1ல், சிவா - விஷ்ணு கோவில் உள்ளது. இங்கு, நுாதன சிவாலயமும், ரங்கநாயகி தாயார் சன்னிதியும் நிர்மாணிக்கப்பட்டு, நுாதன விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த டிச., 12ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, மயிலை முரளி சுவாமிகள் முன்னிலையில், தண்டையார் பேட்டை கே.கே.சேனாபதி சிவாச்சாரியார் குழுவினரால், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மறைமலை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.