சிவகங்கை: ஹனுமந்தராய சிவாமி கோயிலில் புதன்கிழமை ஹனுமன் ஜயந்தி உற்சவம் நடைபெற்றது. ஹனுமந்தராய சுவாமி கோயிலில் விசேஷ ஹோமங்கள், மகா அபிஷேகங்கள், அலங்காரமும் இரவில் சுவாமி திருவீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருப்பத்தூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.