திருப்பூர்: அவினாசிகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா 16-ந்தேதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கருப்பராயன், பொட்டுசாமி, விநாயகர், பட்டத்தரசி அம்மன் ஆகியவற்றுக்கு பொங்கல் பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் அலங்கார பூஜயும், பின்னர் மாவிளக்கு பூஜையும், பொங்கல் விழாவும், உச்சிகால பூஜையும், அம்மன் அழைத்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும், நேற்று மஞ்சள் நீர் பூஜையும் நடந்தது.