அனுமன், வால்மீகிக்கு முன்னால் ராம காதையை நாடமாக இயற்றினார். அந்நாடகத்தை மலைகளில் எழுதினார். தான் ராமாயணத்தினை எழுதிய செய்தியை அறிவிக்க அயோத்திக்குச் சென்றபோது வழியில் வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதுவதைப் பார்த்தார். உடனே திரும்பி, தான் எழுதிய ராம கதை எழுதிய மலைகளைப் பெயர்த்து ஆழ்கடலில் எறிந்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் கடலின் நடுவில் தொன்மையான எழுத்துக்களைக் கொண்ட மலையை பயணிகள் சிலர் பார்த்தார்கள். அந்தக் கற்களை பயணிகள் சேகரித்து மன்னர் போஜராஜனிடம் கொண்டு போய்த் தந்தார்கள். அரசர் அக்கற்களை தாமோதர மிஸ்ரர் என்ற கவிஞரிடம் கொடுத்து பரிசோதிக்கச் சொன்னார். பின்னர் இலக்கியமாக இயற்றும்படி கூறினார். அவ்வாறு உருவானதுதான் அனுமத் நாடகம் என்ற நூல்.