மதுரை மீனாட்சி கோயில், கூடலழகர் கோயில், திருவாதவூர்க் கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன. தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரே தூணில் 22 சங்கீதத் தண்டுகள் உள்ளன. அவைகளில் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கும்பேசுவரர் மங்களாம்பிகா சன்னதியில் உள்ள தூண்களில் கற்களாலான சங்கிலி உள்ளன. சிம்மத்தின் வாயில் உள்ள ஒரு கல்பந்து சுழலும் வகையில் அமைந்துள்ளன. இது போன்ற அற்புதங்களை வடித்த சிற்பிகளின் கைவண்ணம் பிரமிக்க வைப்பவை.