ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பழைமையான இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோயிலில் ஆடு, கோழிகள் பழியிடுவது வழக்கம். முனியப்பன் சுவாமிக்கு பக்தர்கள் சார்பில், பால், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.