புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் ஜன.13ல் நடக்கிறது. அன்று காலை 10மணிக்கு பெருமாள், தாயார் திருமணக் கோலத்தில் பவனி, 10.30 மணிக்கு ஒய்யாளி சேவை, மாலை மாற்றும் வைபவம், 11மணிக்கு பெரியாழ்வார் சீதனம் சமர்ப்பித்தல், மாங்கல்ய தாரணம் நடக்கிறது. திருமணம் விரைவில் நடந்தேறுவதற்காக, பக்தர்கள் சமர்ப்பிக்கும் மாலை ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் சாத்தப்படும். அதையே பிரசாதமாக பெற்று, வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தால் விரும்பிய வகையில் மணவாழ்வு அமையும். இதற்காக முகூர்த்தமாலை பெற விரும்புவோர், ஒரு மாலை வாங்கி வர வேண்டும். முகூர்த்த மாலை காலை 11.30 முதல் மதியம் 1.30 வரையும், மாலை 4 முதல் 8.30 வரையும் வழங்கப்படும். போன்: 98941 99562.