Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருப்பதி ஆயிரம் கால் மண்டபம்:நுாறு ... பழநி தைப்பூச விழா: தங்க ரத புறப்பாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜன.10ல் எருமேலி சந்தனக்குடம்: 11ல் பேட்டை துள்ளல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2014
11:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குடம் ஜன., 10லும், பேட்டைதுள்ளல் ஜன., 11லும் நடைபெறுகிறது. ஜன.,12ல் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது.வரும் ஜன.,14ல், சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சன்னிதானத்தில் நடந்து வருகிறது. மகரஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தில் மட்டும் பக்தர்கள் கூடியிருக்காமல், ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு அனுப்பி வைக்க தேவசம்போர்டும், போலீஸ் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குட பவனி, ஜன., 10 ல் நடக்கிறது. எருமேலி பள்ளி வாசலில் 5 யானைகள் மீது நிர்வாகிகள் அமர்ந்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று காணிக்கை வசூலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.,11 ல் பகல் 12:00 மணிக்கு, அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3:00 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர். ஜன.,12ல், பந்தளத்தில் உள்ள வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பகல் 12:00 மணிக்கு உச்சபூஜைக்கு பின், திருவாபரண பவனி புறப்படுகிறது. இதற்காக, திருவாபரணம் செல்லும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மரக்கூட்டம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்த, போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இனி வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தில் தங்குவர் என்பதால், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar