பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, ஐந்து நாட்களுக்கு, மலைகோயிலில், தங்க ரதத்தில், சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட உள்ளது.பழநி மலைக்கோயிலில், தினமும், இரவு, 7:00 மணிக்கு, தங்க ரதத்தில், சுவாமி புறப்பாடு நடக்கிறது. தைப்பூச விழா, ஜனவரி, 11ம் தேதி, துவங்கி, 20 ம் தேதி வரை, நடக்கிறது. இந்த நாட்களில், மலைகோயிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஜனவரி, 15 முதல் 19ம் தேதி வரை, தங்க ரதத்தில், சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட்டு உள்ளது.