விவசாயம் செழிக்க பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2014 01:01
பழநி: திருப்பரங்குன்றம், அருகே உள்ள சூரங்குளம் பகுதியில் வசித்து வருபவர்களில் 100 பேர் கடந்த மாதம் 1ம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து விவசாயம் செழிக்க வேண்டி பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். அவர்களுடன் அந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.