கடம்பத்துார்:ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில், வரும் 12ம் தேதி, ருத்ராபிஷேக விழா நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், ஏகாட்டூர் ஊராட்சி, ஸ்ரீதேவிகுப்பத்தில் அமைந்துள்ளது, காமாட்சி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவில். இந்த கோவிலில், கைலாசநாதர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இங்கு, வரும், 12ம் தேதி ருத்ராபிஷேக விழா நடைபெற உள்ளது.
நேரம் நிகழ்ச்சி நிரல்
காலை 5:00 மணி கணபதி ஹோமம் 5:30 மணி தம்பதியினர் சங்கல்பம் 6:00 மணி அபிஷேகம் துவக்கம் 9:00 மணி விசேஷ தீபாராதனை.