ஊட்டி: ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் வரும் 11ம் தேதி, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஊட்டி புதுஅக்ரஹாரம் பகுதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில், தற்போது மார்கழி மாத பூஜை நடந்து வருகிறது. நாளை மாலை 4:00 மணிக்கு வேணுகோபால சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை, ஆராதனை, சிறப்பு பூஜை நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடத்தப்படுகிறது. அதிகாலை 5:30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்புபூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. காலை 10:35 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து மாலை 6:05 மணிக்கு கூடாரவள்ளி தினத்தையொட்டி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர், உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.