வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் நாளை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2014 11:01
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நாளை காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முன்னதாக காலை 4.30 மணியளவில், வடமதுரை பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளுவார். பின்னர், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே ஆழ்வார் சுவாமி கோயிலுக்குள் எழுந்தருளுவார். தொடர்ந்து கருட வாகனத்தில் சவுந்தரராஜப்பெருமாள் சுவாமி புறப்பட்டு, முக்கிய வீதிகள் நகரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாட்டினை தக்கார் வேல்முருகன், செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.