பதிவு செய்த நாள்
11
ஜன
2014
11:01
பழநி: தண்டாயுதபாணிக்கு சொந்தம் ஒரு கோவணமும், தண்டமும் தான். காரணம் என்ன? அவன் தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்வதில்லை. அவனது எண்ணமெல்லாம், தன்னை நம்பி வரும் பக்தன் நலமாக இருக்க வேண்டும் என்பது தான். தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னை உளமாற வேண்டி வருவோருக்கு வேண்டியதை அருள்கிறான் அந்தக் கருணைக்கடல். நாரதர் கொண்டு வந்த கனி கூட தனக்கு வேண்டாம் என்பதற்காகத்தான். கோபப்படுவது போல் நாடகமாடி, அதையும் தன் அண்ணனுக்கு கிடைக்கச் செசய்தான். ஆனால், உலகமோ, ""ஞானப்பழமாக நீ இருக்க, உனக்கொரு சாதாரண மாங்கனி பெரிதா? என அவனை இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் "பழம் நீ என்று புகழ்ந்தது. அதுவே பழநியாக மருவி, அங்கே முருகப்பெருமான் அன்புடன் அருள் செசய்கிறான். திரு(மகாலட்சுமி) ஆ(காமதேனு), இனன்(சூரியன்), கு(பூமாதேவி), டி(அக்னி) ஆகியோர் வந்தருளிய இந்த தலம், "திருஆவினன்குடி என்றும் பெயர் பெற்றுள்ளது. இத்தலத்தை வழிபடுவோருக்கு செல்வம், ஆற்றல், பூமி, நற்குணம் ஆகியவை கிடைக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச கொடியேற்றம் நடக்கிறது. இரவு7.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி, புதுச்சேரி சப்பரத்தில் பவனி வருவார்.