ரிஷிவந்தியம்: எடுத்தனூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், மழை வேண்டியும் கிராம மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். பகண்டைகூட்ரோடு அடுத்த எடுத்தனூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் மழை பெய்ய வேண்டியும் மாணிக்க விநாயகர், துர்கை போன்ற சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். இதனையொட்டி சிறப்பு ஹோம குண்டம் வளர்த்து கோ பூஜை, கலச பூஜைகள் நடத்தினர். சுவாமி சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்து, மகாபூர்ணாஹூதி தீப ஆராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் அகிலாண்டம் தண்டபாணி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.