திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மூலவர் லக்ஷ்மி நரசிம்மருக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. மாலை 7 மணிக்கு அரங்கநாதருக்கும் ஆண்டாள் பிராட்டிக்கும் சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சீனுவாச பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.