ஜமதக்னி முனிவர், அம்பெறிந்து குறிகளைத் தாக்கும் பழக்கமுள்ளவர். அவரது மனைவி ரேணுகா, கீழே விழும் அம்புகளை எடுத்து வந்து கொடுப்பாள். ஒருநாள் கடும் வெயில் அடித்ததால், ரேணுகா மிகவும் களைத்து விட்டாள். எனவே முனிவர், சூரியன் மீதே அம்பைத் தொடுத்தார். பயந்து போன சூரியன், ஒரு அந்தணர் வடிவில் வந்து, முனிவரே! உலக நன்மைக்காக இந்த உலகிற்கு இவ்வளவு வெப்பத்தை தருகிறேன். இந்த குடை, பாதுகையை வைத்துக் கொள்ளுங்கள், என்று தானம் அளித்து உண்மை வடிவைக் காட்டி அருளினார். குடை, செருப்பு தானம் செய்தால் நன்மை உண்டாகும் என்று வாக்களித்தார்.