காசி யாத்திரை செல்ல வயது நிர்ணயம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கங்கையில் நீராடுவதற்கும், விஸ்வநாதரை தரிசிப்பதற்கும் ஏழேழு ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கங்காமகாத்மியம் கூறுகிறது. இளமையில் போய் வந்தால், எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். அநேக தீர்த்தக்கட்டங்களிலும் நீராடி விடலாம். அதனால், காசிக்கு யாத்திரையை இளமையில் நழுவ விடாதீர்கள்.