பதிவு செய்த நாள்
15
ஜன
2014
01:01
சகல சம்பத்துடன் நீடுழி வாழ்க! என்று பெரியவர்கள் மணமக்களை வாழ்த்துவார்கள். இதில் வரும் சம்பத் என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். செல்வம் என்றால் பணம், குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் என்பது மட்டுமல்ல! இதையெல்லாம் தாண்டி, அவ்வுலகத்திற்கு நாம் செல்லும் போது, ஒரு செல்வம் வேண்டும். அதுதான் மோட்சம் என்னும் நிரந்தர செல்வம். ஆக, இவ்வுலக செல்வத்தையும், அவ்வுலக செல்வத்தையும் அடைய ஒரே வழி ஏகாதசி விரதம் இருந்து, நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது தான். இதை தனியாக அமர்ந்து சொல்வதை விட, பலரும் கூட்டமாக அமர்ந்து சொன்னால், அந்த இடமே சுத்தமாகும். மனம் சுத்தமாகும். இன்னும் நினைத்துப் பார்க்காத ஆச்சரியங்களெல்லாம் நடக்கும். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷிகேஷா, பத்மநாபா, தாமோதரா என்ற 12 நாமங்களைத் தினமும் சொல்லி, உடலில் 12 இடங்களில் நாமம் (திருமண்) இட்டால் சகல சம்பத்தும் நம்மைத் தேடி வரும்.