குஜராத்திலுள்ள துவாரகா, ஒடிõசவிலுள்ள பூரி, கோனார்க் மற்றும் கயாஆகிய இடங்களில் சூரியக்கோயில்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சூரியனார் கோவிலில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பஜாகுகை, எல்லோரா, கோண்டாஹி ஆகிய இடங்களிலும் சூரிய வடிவங்கள் காணப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மேதேரா கோயிலிலும் சூரிய உருவம் உள்ளது. ஆந்திராவில் ஆரவல்லி என்ற இடத்தில் உஷா, சாயாதேவியுடன் சூரியன் அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் மகாபலிபுரத்திலும், சூரியனார் கோவிலிலும் பெரிய சூரிய சிலைகள் உள்ளன.