பதிவு செய்த நாள்
16
ஜன
2014
10:01
கள்ளக்குறிச்சி: பொங்கலன்று வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, அதன் நடுவே விளக்கேற்றி, பெண்கள் வழிபாடு செய்தனர். ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வதந்தி பரவியதால், இதை கடைபிடித்ததாக பெண்கள் கூறினர். பொங்கல் பண்டிகையின்போது, வீட்டு வாசலில், பல வண்ணங்களில் கோலமிட்டு, சூரியனை வழிபட்டு பொங்கலிடுவது வழக்கம். இந்த மாதம், ஏகாதசி முடிந்து கோவில்களில் பஞ்சாங்கம் படித்ததில், பொங்கல் பண்டிகை காலத்தில், சாமி, காளை மீதமர்ந்து ஊர்வலம் வருவது போன்று உள்ளதாகவும், இதனால் ஆண்களுக்கு தோஷம் ஏற்பட போவதாகவும், கள்ளக்குறிச்சி பகுதிகளில் வதந்தி பரவியது. இதற்கு நிவர்த்தியாக, நேற்று முன்தினம், பொங்கலன்று காலையில் வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு, அதன் நடுவே தீபமேற்றி வழிபட வேண்டும் என, கூறப்பட்டது. இதனால், கள்ளக்குறிச்சியில் வீட்டு முற்றத்தில் கோலத்தின் நடுவே விளக்கேற்றி, தேங்காய், பழம் வைத்து, பெண்கள் வழிபாடு நடத்தினர்.