சபரிமலை: சபரி மலையின் இந்தாண்டு வருமானம் 181.78 கோடி ஆக வசூல் ஆகிஉள்ளது. என திருவாங்கூர் தேவசம் போர்டு சேர்மன் எம்.பி. கோவிந்தன் நாயர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 155.67 கோடியாக வசூல் ஆகியிருந்தது. மொத்த வசூலாக 26 கோடி ரூபாய் அதிகரித்துளளது. மேலும் மகரவிளக்கு காலபூஜையில் 50.71 வருமானம் கிடைத்துள்ளது. கடந்தாண்டில் 45.63ரூபாய் அளவிற்கு கிடைத்தது என்று தெரிவித்தார். மேலும் தேவஸ்வம் துறை அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார் கூறுகையில் ஒரு லட்சம் பேருக்கு உணவளி்க்ககூடிய அன்னதானமண்டம் கட்டப்படும். மாளிகைபுரம் தேவி கோவில் 4 கோடி செலவில் சீரமைக்கப்படும். நிலக்கல்லில் 77 கோடி ரூபாய் செலவில் இந்தாண்டு வரும் சபரி மலை சீசனை ஒட்டி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்.