உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2014 10:01
மதுரை: மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. காலை 7.40 மணியளவில் துவங்கிய ஜல்லி கட்டு போட்டியில் முதலாவதாக கோயில் மாடு கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை மாடு பிடி வீரர்கள் தொட்டு வணங்கி வழிவிட்டனர். மதுரை மாவட்டத்தி்ல மூன்றாவது நாளாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இப் போட்டியில் 650 காளைகளை பிடிப்பதற்காக 650 வீரர்கள் களத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டம் சிராவயல்புதூரில் நடக்கும் ஜல்லிகட்டு போட்டி காலை11 மணியளவில் துவங்குகிறது. இப்போட்டியி்ல 354 காளைகள் பங்கேற்கின்றன.