பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
பரமக்குடி: பரமக்குடி புனித அலங்காரமாதா சர்ச் வளாகத்தில், பொங்கல் விழா நடந்தது. பங்குத்தந்தை பிரபாகரன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகங்கை சவரிமுத்து, உதவி பங்குத்தந்தை பாசில் முன்னிலை வகித்தனர். கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பங்கு பேரவையினர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் பலர் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம்: சுற்றுலாத்துறை சார்பில், ராமேஸ்வரம் விவேகானந்த பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் பெண்களுக்கான கோலப் போட்டி, பள்ளி சிறுவர்களுக்கான மாறுவேட போட்டி நடந்தது. பின், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் வைத்தனர். சத்திரக்குடி புஷ்ப லதா, ராமநாதபுரம் பாலாஜியின் பரத நாட்டியம், முத்துபேட்டை ஆனந்த் கரகம், காவடி நடன நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் அர்ச்சுனன், விவேகானந்தா பள்ளி தாளாளர் சாரதானந்தா, ராமேஸ்வரம் சுற்றுலா அலுவலர் பாலசுப்பிரமணியன் பலர் பங்கேற்றனர்.
சாயல்குடி: கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் தாளாளர் மற்றும், முதல்வர் பெர்லின் ஆனந்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் டி.சி. பாண்டியன், மானுவேல், சுசீலா பேசினர். அமுதம் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயசீலா, சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.