புதுச்சேரி: அரியாங்குப்பத்திலுள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், 143வது தைப்பூச விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 8.00 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது. திருவருட்பா பாடலை அன்னபூரணி அம்மாள் பாடினார். குழந்தைவேலனார், அருணகிரி ஆகியோர் வள்ளலார் பற்றி சொற்பொழிவாற்றினர். காலை 11.00 மணிக்கு, வள்ளலாரின் ஒளி நெறிபரவ அகல் விளக்கின் "ஒளி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி பத்மபிரியா, வள்ளலாரின் சிறப்புகள் மற்றும் திருக்குறளின் பெருமைகள் குறித்து பேசினார்.