கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் துர்கை அம்மனுக்கு வளையல் அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தை முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காலை 5.30 மணிக்கு பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.தொடர்ந்து ராகு காலத்தில் சிவதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். லலிதா சகஸ்ரநாம மந்திரம் வாசித்து குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பெண்கள் சுமங்கலி தாம்பூலம் பரஸ்பரம் கொடுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.